Posts

சச்சின் மகளா...! இந்தி நடிகையா...! வைரலான சாரா...! சாரா... கோஷம் !!!

Image
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான சுப்மன் கில் கடந்த 2019-ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். அவர் ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் முடிவடைந்த ஒருநாள் தொடரில் இலங்கை எதிரான ஆட்டத்தில், தனது இரண்டாவது ஒருநாள் சதத்தை அடித்து, ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டார்.ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை கில் பெற்றார். நேற்று முந்தினம் நடைபெற்ற இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசி சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கில் 149 பந்துகளில் 208 ரன்கள் எடுத்தார், அவர் ஒருநாள் போட்டிகளில் 200 ரன்கள் கிளப்பில் நுழைந்த ஐந்தாவது இந்திய வீரர் ஆனார்.இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் தெண்டுல்கர், அவரைத் தொடர்ந்து வீரேந்திர சேவாக். கடந்த ஆண்டு டிசம்பரில் வங்காளதேசத்திற்கு எதிராக சிறந்த இரட்டை சதம் அடித்த இஷான் கிஷானுக்கு முன் ரோகித் சர்மா மூன்று இரட்டை சதங்களை அடித்தார் இதன் மூலம் தெண்டுல்கரின் 24 வருட ச

பொங்கல் விடுமுறை முடிவில் வசூலில் நம்பர் ஒன் யார்...!

Image
சென்னை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த 'துணிவு', நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய திரைப்படங்கள் வெளியானது. ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர். படம் வெளியான தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கட்-அவுட், பேனர் வைத்தும், கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். பொங்கல் விடுமுறையும் முடிவுக்கு வந்துவிட்டதால் துணிவு மற்றும் வாரிசு படங்களின் முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை இப்போது பார்க்கலாம். கடந்த 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் இந்த இரண்டு படங்களுமே வசூலை வாரிக்குவித்து உள்ளன. இதில் பொங்கல் விடுமுறை முடிவில் அதிக கலெக்ஷனை அள்ளியது யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். விஜய்யின் வாரிசு 5 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்தது. அடுத்த சில மணி நேரங்களிலேயே அஜித்தின் துணிவு 5 நாட்களில் 175 கோடி கலெக்ஷன் செய்துள்ளதாக தகவல் வெளியானது.

ரிக்கி பாண்டிங் வைத்த கோரிக்கை...!

Image
இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த மாதம் 30-ந்தேதி கார் விபத்தில் சிக்கினார். சாலையின் தடுப்பில் மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பிய அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கால்முட்டி காயத்துக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு உள்ள நிலையில் அவர் இந்த பாதியில் இருந்து முழுமையாக மீள குறைந்தது 6 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டி வரும் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் இந்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என ஏற்கனவே டெல்லி அணி நிர்வாகம் கூறியுள்ளது. இந்நிலையில், ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடருக்கு வர வேண்டும் என டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, ரிஷப் பண்ட் விளையாடுவதற்கு உடற்தகுதியுடன் இல்லை என்றாலும், அவர் எங்கள் அணிக்கு தேவை. ஒரு கேப்டனாக அவரின் செயல்பாடுகள், சிரிப்புகள், அணியை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்வது போன்றவை கண்டிப்பாக டெல்லி அணிக்கு தேவை. எனவே ரிஷப் பண்ட் பயணம் மேற்கொள்ளும் அளவிற்கு தயாராகி